நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது சர்தார், விருமன், பொன்னியின் செல்வன் என அடுத்தடுத்த படங்கள் கைவசம் இருக்கின்றன.
முதலாவதாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெகு விரைவிலேயே திரையில் வெளிவர ரெடியாக இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் லக்ஷ்மன் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சர்தார் இந்த படத்தில் ஹீரோவாக கார்த்தி நடித்து அசத்தியுள்ளார். பிஎஸ் மித்ரன் இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
கார்த்தியுடன் இணைந்து சர்தார் படத்தில் ராசி கண்ணா, லைலா, ரஜிஷா, விஜயன், முனீஸ் காந்த், இளவரசு என ஒரு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. இந்த படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சர்தார் படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் சங்கி பாண்டே நடிக்கிறார். படத்தின் சில முக்கியமான காட்சி என்பதால் வெளிநாட்டில் படமாக்கப்பட்டு வருகிறதாம் இதுவரை சூட்டிங் எடுக்கப்படாத அசர்பைசான் பாராளுமன்றத்திலேயே சூட்டிங் நடத்தப்படுகிறது.
அதில் பாலிவுட் பிரபலம் சங்கி பாண்டே சம்பந்தப்பட்ட காட்சிகள் உருவாக்கப்படுகிறது மற்றும் பல இடங்களில் படமாக்கப்பட உள்ளது இதனை எடுத்து ஜார்ஜியா நாட்டிலும் படமாக்கப்பட உள்ளது இந்த இரு இடங்களிலும் நடைபெற்ற காட்சிகளுக்கு மட்டுமே சுமார் 4 கோடி செலவு செய்து உள்ளது இதனை தொடர்ந்து சென்னையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம்.