பாலிவுட் பக்கம் அசத்திய வலிமை.. லிஸ்ட்டில் கூட இல்லாமல் போன விஜயின் பீஸ்ட் படம்.! அதிர்ச்சியான ரசிகர்கள்.

தென்னிந்திய சினிமா உலகில் எடுக்கப்படும் பல்வேறு திரைப்படங்கள் இந்திய அளவில்  நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது மேலும் பெரிய அளவில் பேசப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் அண்மையில் தென்னிந்திய சினிமா உலகில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான RRR, கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய அளவில் பேசப்பட்டது.

மேலும் வசூலில் அடித்து நொறுக்கியது அதேபோல தமிழ் சினிமாவுலகில் உச்ச நட்சத்திர நடிகர்களாக இருக்கும் அஜித்தின் வலிமை திரைப்படமோ இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது. ஆனால் வலிமை திரைப்படத்தை தொடர்ந்து வெளிவந்த விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் பாலிவுட் சினிமா பக்கம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பை பெறாதது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படங்கள் எவ்வளவு வசூலித்துள்ளது எந்த இடம் எந்த இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்தும் தகவல் வெளியாகி உள்ளது கேஜிஎப் 2 திரைப்படம் 2 கோடிக்கு மேல் பார்வையாளர்களைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

அதற்கு அடுத்தபடியாக RRR படம் 1.7 கோடி பார்வையாளர்களை பெற்று அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படம் 8 லட்சம் பார்வையாளர்களை பெற்று 11வது இடத்தைப் பிடித்தது அதன் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் பீஸ்ட் படம் இந்த லிஸ்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு தென்னிந்திய சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும் பாலிவுட் பக்கம் சொல்லிக்கொள்ளும்படி வரவேற்பு இல்லை இதற்கு முன்னாடி கூட விஜய்யின் படங்கள் பாலிவுட்டில் அந்த அளவிற்கு பெரிய வரவேற்ப்பை பெற்றது கிடையாது.

Leave a Comment