தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளவர் நடிகை சமந்தா சினிமா உலகில் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்து வந்த இவருக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. நடிகை சமந்தா தனது பயணத்தை முதலில் தமிழில் தான் தொடர்ந்தார்.
இவர் இதுவரை உச்ச நட்சத்திரங்களான விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து தனது மார்க்கெட்டை பெருக்கிக் கொண்டார் ஒரு கட்டத்தில் இவருக்கு தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிய தொடங்கியது அங்கு வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கிளாமர் காட்டி அசத்தியதால் சமந்தாக்கு படவாய்ப்புகள் குவிந்தன.
இதன் காரணமாக தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக விஸ்வரூபம் எடுத்தார். அப்படியே ஓடிக்கொண்டிருந்த சமந்தா திருமண வாழ்க்கையில் ஈடுபட்டார். அவர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்டு சில காலங்கள் வாழ்ந்தாலும் இருவருக்கும் இடையே சிறு மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர்.
பின்பு இதிலிருந்து வெளியே வந்த சமந்தா தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்திக்கொண்டு நடித்து வருகிறார். ஏன் அண்மையில் கூட அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இடம் பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடிகை சமந்தா குட்டை டிரஸை போட்டுக் கொண்டு சற்று கிளாமராக ஆடி இருந்தார்.
இந்தப்பாடல் தற்பொழுது யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை தாண்டி உள்ளதோடு மட்டுமல்லாமல் இந்த பாடலின் மூலம் நடிகை சமந்தா பட வாய்ப்புகளையும் அள்ளி பெறுகிறார். அதிலும் குறிப்பாக நடிகை சமந்தா பாலிவுட்டில் தற்பொழுது காலடி எடுத்து வைக்க இருக்கிறார் ஏற்கனவே ஒரு தடவை தி ஃபேமிலி மேன் வெப் சீரியஸில் நடித்து இருந்தார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது வாய்ப்புகள் குவிந்து உள்ளதால் தனது திறமையையும், கிளாமரையும் காட்டவும் ரெடியாக இருக்கிறார்.
இவரது கையில் தற்போது மூன்று பாலிவுட் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் தெலுங்கில் யசோதா, சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.