பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகி வெற்றிகண்ட திரைப்படம் கே ஜி எஃப் இந்த படம் முழுக்க முழுக்க அம்மா சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் கன்னட சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் பேசப்பட்டது படம் தொடர்ந்து நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டையும் நடத்தியது.
சொல்லப்போனால் முதல் படமே பிரம்மாண்ட வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டுமென சினிமா ஆர்வலர்கள் தொடங்கி ரசிகர்கள் என பலரும் பிரசாந்த் நீலை கேட்டுக்கொண்டதற்கு இணங்க உடனடியாக இரண்டாவது பாகம் உருவானது. ஆனால் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்த கேஜிஎப் 2 ஒருவழியாக இரண்டு வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்த திரையரங்கில் வெளியிடப்பட்டது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் மாஸ் சீன்கள், செண்டிமெண்ட் சீன்கள், பஞ்ச் டயலாக், ஆக்சன் போன்றவை அனைத்தும் அற்புதமாக இருந்ததால் கே ஜி எஃப் 2 இந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்றது வசூலில் சுமார் 1200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த படத்தில் கடைசி காட்சியில் நடிகர் யாஷ் இறந்து விடுவது போல காட்டி இருந்தாலும் இதன் மூன்றாவது பாகம் வெளிவரும் என சொல்லி தான் படத்தை முடித்தது.
இதனால் ரசிகர்கள் கேஜிஎப் 3 எப்பொழுது வரும் இதில் யார் யார் நடிப்பார்கள் என்பது குறித்து கேட்டு வருகின்றனர் இதற்கு பிரஷாந்த் நீல் KGF 3 படம் உருவாகி வர கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் ஆகிவிடும் என கூறி உள்ளார். காரணம் இவர் பிரபாஸ் மற்றும் ஜூனியர் என்டிஆர் என டாப் நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களை உருவாக்கி வருகிறார்.
இந்த படங்களை முடித்த பிறகே KGF 3 உருவாகும் என கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் KGF 3 படத்தில் வில்லனாக யார் நடிப்பார் என்பது குறித்து ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது அதன்படி பார்க்கையில் KGF 3 படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.