இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் கேஜிஎப் இந்த படத்தின் இரண்டாவது பாகம் உடனடியாக தொடங்கப்பட்டு இருந்தாலும் கொரோனா பரவல் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி போய்க்கொண்டே இருந்தது. ஒரு வழியாக இரண்டு வருடங்கள் கழித்து கே ஜி எஃப் 2 படம் ரிலீஸ் ஆனது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகத்தில் ஆக்ஷன் சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்த காரணத்தினால் அனைத்து இடங்களிலும் இந்த படம் கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழ் நாடு ஹிந்தி ஆகிய பக்கங்களில் நல்ல வசூல் வேட்டை நடத்தியது. கேஜிஎப் 2 திரைப்படம் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் மூன்றாவது பாகம் உருவாகும் என படக்குழு தெரிவித்துள்ளது அதனால் ரசிகர்கள் எப்பொழுது கேஜிஎப் 3 எடுப்பீர்கள் என கேட்டுக் கொண்டு வருகின்றனர். KFG 3 படம் எடுக்க சில வருடங்கள் உள்ளன. காரணம் இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸை வைத்து ஒரு புதிய படம் எடுக்கிறார்.
அடுத்ததாக ஜூனியர் NTR ரை வைத்து இன்னொரு புதிய படம் எடுக்க உள்ளார் இதனால் அவர் இந்த படங்களை முடித்த பிறகு யாஷுடன் இணைவார் அதற்கான வேலைகளில் இறங்குவார் என கூறப்படுகின்றது. இப்படி இருக்கின்ற நிலையில் கேஜிஎப் 3 படத்தில் நடிக்க பல பாலிவுட் ஹீரோயின்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் கேஜிஎப் 3 தற்போது ஸ்கிரிப்ட்டி எழுதி முடித்த பிறகு எந்தெந்த பாலிவுட் நடிகைகள் விருப்பம் தெரிவித்திருந்தனரோ.. கதைக்கு ஏற்றபடி படத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். பிரசாந்த் நீல் மற்றும் யாஷ் இருவரும் தொடர்ந்து வெவ்வேறு படங்களில் பணியாற்றி வருகின்றனர் அவை அனைத்தையும் முடித்துவிட்டு ஒன்று சேர்ந்தால் KGF 3 படத்தை எடுக்க ரெடி என தயாரிப்பாளர் கூறியுள்ளார்.