“நானும் ரௌடி தான்” திரைப்படத்தை 100 தடவை பார்த்த பிரபல பாலிவுட் நடிகை – மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கொடுத்த பதில் என்ன தெரியுமா.?

naanum rowdy thaan
naanum rowdy thaan

நடிகர் விஜய்சேதுபதி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் நல்ல கதைக்களை மட்டுமே தேர்வு செய்து நடித்துள்ளார் அதனால் தான் அவரது படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகிறது சினிமா உலகில் எவ்வளவு வளர்ச்சியை அடைகிறாரோ..

அதே அளவிற்கு தனது குணத்தையும் மாற்றிக் கொண்டு ஓடுகிறார்.. ஆம் ரசிகர்கள் மத்தியிலும் சரி,  அவரை சுற்றி இருப்பவர்களையும் சரி கவர்ந்திருக்கும் வகையில் பேசுவார் மேலும் எல்லோரிடமும் சகஜமாக பழகக் கூடியவர் இதனால் அனைவருக்கும் பிடித்தவராக விஜய் சேதுபதி இருந்து வருகிறார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிஎஸ்பி திரைப்படம்..

நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து விஜய் சேதுபதி கையில் விடுதலை, ஜவான் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்லாமல் பல்வேறு புதிய படங்களிலும் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார் இப்படி திரை உலகில் ஓடும் இவருக்கு ரசிகர்களும் சரி பல நடிகர் நடிகைகளுக்கும் சரி ரொம்பவும் பிடித்தவராக இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் பாலிவுட் பிரபல நடிகை ஒருவர்.. விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 தடவை பார்த்து உள்ளேன் என கூறியுள்ளார் அந்த பிரபலம் வேறு யாரும் இல்ல.. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான்.. இவர் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையாம்.. விஜய் சேதுபதி நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரவுடிதான் திரைப்படத்தை 100 தடவை பார்த்துவிட்டு..

விஜய் சேதுபதிக்கு போன் பண்ணி நான் உங்கள் தீவிர ரசிகை என கூறியிருக்கிறாராம் மேலும் உங்களது படத்தில் என்னை நடிக்க வையுங்கள் என்னை நினைத்தால் கூப்பிடுங்கள் நான் ஆடிஷனுக்கு  வந்து கலந்து கொள்கிறேன் என கூறி இருக்கிறாராம்.. இதைக் கேட்ட விஜய் சேதுபதி ஐய்யயோ என கூறியிருக்கிறாராம் இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் வெளிப்படையாக கூறியுள்ளார்.