“அரபிக் குத்து” பாடலுக்கு விஜய் கூட இப்படி ஆடல.. செம்ம குத்து குத்திய பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்.! வைரல் வீடியோ..

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் பிளாக்பஸ்டர் படங்களாக இருந்து வந்துள்ளன.  கடைசியாக விஜய் நடித்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பியது..

அதே சந்தோஷத்துடன் தளபதி விஜய் தற்போது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. வாரிசு படத்தை தொடர்ந்து  விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் மீண்டும் ஒருமுறை கைகோர்த்து தளபதி 67 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி 67 கதையை தீவிரமாக எழுதி வருகிறார் மறுபக்கம் இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர், நடிகைகளையும் தட்டி தூக்கி வருவதாக கூறப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பாடல் ஒன்று இணையதளத்தில் பலரையும் ஆட்டம் போட வைத்துள்ளது.

விஜய் படங்கள் வெற்றி பெறுவதற்கு அவரது நடிப்பு, ஆக்சன் போன்றவை மக்களை கவர்ந்தாலும் அவரது படத்தில் இடம்பெற்றுள்ள பாடல், டான்ஸ்சும் ஒரு பக்கம் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கிறது குறிப்பாக விஜய் படத்தில் வரும் பாடல்கள் அனைத்துமே சூப்பராக இருக்கும் அந்த வகையில்  நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள..

அரபி குத்து பாடல்  youtube-ல் ட்ரெண்டாகி எல்லாருக்கும் பிடித்து போய் இருந்தது இப்படி இருக்கின்ற நிலையில் பாலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் குழந்தைகளுடன் சேர்ந்து அரபிக் குத்து பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்  நடனமாடிய  வீடியோ..