ஹிந்தி சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்தவர் காத்ரீனா கைப். ஆள் பார்ப்பதற்கு செம ஃபிட்டாக இடுப்பழகை சூப்பராக வைத்துக்கொண்டு படங்களில் நடித்த காரணத்தினால் மிக விரைவிலேயே உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார் ஹிந்தி சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான், ரித்திக் ரோஷன் போன்ற நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையையும் சற்று கவர்ச்சியையும் காட்டி வந்தவர் காத்ரீனா கைப்.
இதன் காரணமாக பேரையும் புகழையும் சம்பாதிப்பதோடு தொடமுடியாத உச்சத்தை எட்டினார். சினிமா உலகில் நீண்ட தூரம் பயணித்து வந்தாலும் வயதாகிக் கொண்டே போனதால் திருமணம் செய்யாமல் இருந்து வந்த நிலையில் அதற்கு முடிவு கட்டை போடும் வகையில் அண்மையில் பிரபல நடிகரான விக்கி கௌஷல் என்பவரை திருமணம் செய்துகொண்டு தன்னை குறை பேசி வந்தவர்களுக்கு ஷாக் வைத்துள்ளார் காத்ரீனா கைப்.
இவர்களது திருமணம் கோலாகலமாக பிரம்மாண்ட முறையில் நடத்தப்பட்டது. இவர்களது திருமணத்திற்கு பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அசத்தினார் திருமண புகைப்படம் திருமணத்திற்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் தீயாய் பரவி வந்தது திருமணம் முடிந்த கையோடு பிரபலங்கள் ஒவ்வொருவரும் பரிசுகளை கொடுத்து திருமண ஜோடியை இன்ப அதிர்ச்சியில் வைத்துள்ளனர்.
பாலிவுட் பிரபலம் சல்மான்கான் மூன்று கோடி மதிப்பில் உள்ள ரேஞ்ச்ரோவர் காரை திருமண ஜோடிக்கு பரிசாக கொடுத்து அசத்தினார். ரன்பீர் கபூர் 2.7 கோடி மதிப்பிலான வைர நெக்லஸ் ஒன்றை திருமண பரிசாக அளித்தார்.
இவர்களைத் தொடர்ந்து ஷாருக் கான், ரிதிக் ரோஷன், ஆலியா பட் போன்ற பிரபல பாலிவுட் பிரபலங்கள் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களை பரிசாக கொடுத்து அசத்தி உள்ளனர் இதன் மூலம் காத்ரீனா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணத்திற்கு வந்த பரிசு தொகை மட்டுமே சுமார் 10 கோடிக்கு மேல் என கூறப்படுகிறது.