தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்த ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை அமலாபால் ஒரு காலகட்டத்தில் ஹோமிலியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சமீப காலங்களாக கவர்ச்சி திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்பொழுது நடிகை அமலா பால் கடாவர் என்ற திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இத்திரைப்படம் ஹாட் ஸ்டார் ஒடிடி வழியாக விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கும் பொழுது இந்த படத்தை வெளியிடக் கூடாது என்றும் எனக்கு எதிராக கடுமையாக சிலர் உழைத்தார்கள் என அமலபால் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்பொழுது சர்ச்சை நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அமலா பால் இவர் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தினார்.அதோடு மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் வெளிப்படும் அனைத்து திரைப்படங்களும் கலவை விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள கடாவர் என்ற திரைப்படம் ஹாட்ஸ்டார் வழியாக வரும் 12ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது. எனவே இதனை முன்னிட்டு தனது பட குழுவினர்களுடன் சென்னையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.
அப்பொழுது பேசி அமலா பால் கொரோனா பாதிப்புக்கு பின்னர் இந்த திரைப்படம் விழாவில் நான் கலந்து கொண்டிருக்கிறேன் நான்காண்டு காலம் கடமையான உழைத்து பல இடையூறுகளுக்கு இடையே இந்த படம் முடிந்துள்ளது.இந்த படத்தை வெளியிட திட்டமிட்ட போது பல தடைகள் உருவானது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்பதற்காக சிலர் கடுமையாக உழைத்தனர்.
ஆனால் கடவுள் அருளால் இந்த படம் தற்பொழுது ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது தமிழில் சில மெடிக்கல் கிரைம் திரைப்படங்கள் வந்தாலும் தடவியும் துறையில் இதுவரை படங்கள் அதிகமாக வெளியாகவில்லை என்றும் காவல்துறையில் பணியாற்றும் தடவியல் துறை நிர்புணர் கேரக்டரின் நடித்திருக்கிறேன் என்றும் ரசிகர்கள் இந்த படத்திற்கு ஆதரவை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.