காமெடியனாக திரையுலகில் நுழைந்தவர் சந்தானம். ஆரம்பத்தில் சின்ன சின்ன படங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் அஜித், விஜய், விக்ரம் என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார். இப்படி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார்.
முதலில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அசத்தினார் முதல் படமே நல்ல வசூல் வேட்டை நடத்தியதோடு இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதன் பின் இவர் தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, டக்கால்டி, பிஸ்கோத் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.
கடைசியாக இவர் நடித்த குளுகுளு திரைப்படம் கூட கலவையான விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடியது. இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது இப்பொழுது கூட கைவசம் இரண்டு மூன்று படங்கள் வைத்திருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சந்தானம் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
சினிமா பிரபலங்கள் பெரிய பெரிய அரசியல்வாதிகள் மட்டுமே போயஸ் கார்டனில் இடம் வாங்கி வருகின்றனர் அந்த வகையில் ஜெயலலிதா, நயன்தாரா, ரஜினியை தொடர்ந்து அந்த லிஸ்டில் தற்பொழுது நடிகர் சந்தானமும் சேர்ந்துள்ளார். சந்தானம் போயஸ் கார்டனில் மிகப்பெரிய ஒரு வீட்டை வாங்கி உள்ளார்.
அதன் மதிப்பு மட்டுமே சுமார் 22 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரிய பெரிய நடிகர்கள் மட்டுமே போயஸ் கார்டனில் இடம் வாங்கி வந்த நிலையில் சந்தானம் வாங்கியது அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.