மூன்று மொழிகளில் வெளியாக போகும் பாபிசிம்ஹாவின் புது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.!

bobby simha
bobby simha

தமிழ் திரைப்படமான ஜிகர்தண்டா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் பாபி சிம்ஹா. இவர் படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில குறும்படங்களை தான் நடித்து இருந்தார் இதன் பிறகுதான் இவர் வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்தார்.

இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் இவருக்கு ரசிகர்கள் ஏராளம் இருந்து வருகிறார்கள்.அந்தவகையில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் இவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் நடித்திருந்த புத்தம் புது காலை என்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியானது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவாக கவர இல்லை.

இந்நிலையில் இவர் சீறும் புலி, வல்லவனுக்கு வல்லவன், 777 சார்லி போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் பாபிசிம்ஹாவின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் நடிக்கும் புத்தம் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

எஸ் ஆர் டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் முத்ராஸ் பிலிம் ஃபேக்டரி இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு வசந்த முல்லை என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தை ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ளார் இவருக்கு இந்தப் படம்தான் முதல் படமாக இயக்க போகிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இந்த படம் ரெடியாகிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை ரசிகர்கள் ஆவலோடு பார்த்துக் கொண்டு வருகிறார்கள்.

bobby-simha-in-vasantha-mullai
bobby-simha-in-vasantha-mullai