Jailer : தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோவாக வருபவர் சூப்பர்ஸ்டார் ரஜினி. இவர் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி 4000 திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் செம்ம வெயிட்டாக இருந்தது.
அவர் பார்ப்பதற்கு பூனை குட்டி போல் இருந்தாலும் ஆக்சன் காட்சியில் சுறுசுறுப்பாக நடித்து அசதினார், விநாயகத்தின் ரவுடிசம், யோகிபாபு காமெடி என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தற்பொழுது ஹவுஸ்புள்ளாக பல்வேறு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இதுவரை மட்டுமே படம் வெளியாகி 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 200 கோடி பட்ஜெட்டில் எடுத்தது எதிர்பார்த்ததை விட தற்பொழுது லாபம் வந்து கொண்டிருப்பதால் குஷியில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன் படத்தில் நடித்த ரஜினிக்கு தற்பொழுது பரிசுகளை கொடுத்து அழகு பார்த்து வருகிறார்.
நேற்று ரஜினியை சந்தித்து செக் ஒன்றை கொடுத்தார் அதனைத் தொடர்ந்து பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரியஸ் கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார் அதில் ரஜினி அமர்ந்து பார்த்துவிட்டு வெளியே வந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது. ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு ரஜினியின் நடிப்பு ஒரு முக்கியமான காரணம் என்றால் படத்தை இயக்கிய நெல்சனுக்கும் அதில் பங்கு உண்டு.
ஆனால் நெல்சனுக்கு இதுவரை எந்த ஒரு பரிசையும் தயாரிப்பு நிறுவனம் சைடுல இருந்து போகவில்லை.. இதை பார்த்த ரசிகர்கள் விக்ரம் படம் 400 கோடி வசூல் பண்ணியதற்கு கமல் மிகப்பெரிய சொகுசகார் ஒன்றை லோகேஷுக்கு பரிசாக கொடுத்தார் ஆனால் ஜெயிலர் படம் 600 கோடி வசூல் செய்தும் நெல்சனுக்கு ஒரு ஸ்கூட்டர் கூட வாங்கி தரவில்லை எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.