முக்கிய இடத்தில் ப்ளூ சட்டை மாறனின் “ஆன்டி இண்டியன்” படம் வெளியிடுவதற்கு தடை – முடியாமல் புலம்பும் படக்குழு.

blue-sattai
blue-sattai

சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளியாகி வெற்றி கண்டு வரும் திரைப்படம் ஆன்டி இண்டியன். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மதத்தை குறித்து எடுக்கப்பட்ட ஒரு படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தை ப்ளூ சட்டை மாறன் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு முன்பாக யூடியூப் சேனலில் தமிழ் டாக்கீஸ் என்ற ஒரு சேனலை நடத்திவருகிறார்.

அதில் புது புது படங்களை பற்றி விமர்சிப்பது மற்றும் பொழுது பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதிலும் பெரிதும்  விமர்சிப்பது தான் இவர் ஸ்டைல். எந்த ஒரு படமாக இருந்தாலும் அதை குறையை மட்டுமே சொல்லி வருகிறார் இதனால்  படங்களின் தயாரிப்பாளர் தொடங்கி ரசிகர்கள் வரை அனைவரும் இவரை விமர்சித்து தான் வருகின்றனர்.

ஆனால் இவரோ அவர்களை விமர்சிக்காமல் படத்தை தாறுமாறாக கிழித்து தொங்க விடுவது வழக்கமாக வைத்துள்ளார் இதுவரை அவர் பல்வேறு படங்களை அப்படித்தான் எழுதி எடுத்துள்ளார் அண்மையில் வெளிவந்த மாநாடு படத்தையும் அவர் தாறுமாறாக விமர்சித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் இயக்கத்தில் ஆன்டி இண்டியன் திரைப்படம் உருவாகி திரையரங்கில் வெளியாகி உள்ளது மக்கள் மத்தியில் ஓரளவு நல்ல விமர்சனத்தையே பெற்றுள்ளது காரணம் ஓரளவிற்கு நல்லதொரு கருத்தை சொல்லும் படமாக ஆன்டி இண்டியன் படம் இருக்கிறது ஆனால் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை கைப்பற்றும் என்றால் அது கேள்விக்குறிதான்.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழை தாண்டி பல்வேறு இடங்களிலும் இந்த திரைப்படம் வெளியாகாமல்  படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக சிங்கப்பூரில் இந்த திரைப்படத்திற்கு தடை வழங்கி உள்ளது படக்குழு மற்றும் ப்ளூ சட்டை மாறன் படத்தை வெளியிட என்னென்னவோ செய்து வருகிறார் ஆனால் வெளிவராமல் இருக்கிறது காரணம் மத அரசியலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் சிங்கப்பூரில் தடை விதிக்கப்பட்டது என சிங்கப்பூர் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது இதனையடுத்து மறு தணிக்கை குழுவினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.