ஏம்பா ஏய் விஜய் என்ன சொன்னாலும் நீ உருட்டுவியா .. லோகேஷ் உடன் மல்லு கட்டும் ப்ளூ சட்டை மாறன்

Leo
Leo

Leo : விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக வெளியாக உள்ளது.  சில தினங்களுக்கு  ட்ரைலர் வெளியானது அதில் முழுக்க முழுக்க ஆக்சன் மட்டுமே தெரிந்தது. இருந்தாலும்..

பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றிகரமாக போய்க்கொண்டு இருக்கிறது. லியோ  ட்ரைலர் பலரையும் கவர்ந்திருந்தாலும் அதே அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது காரணம் லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசுவது தான். இதற்கு தெளிவான விளக்கத்தை லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

எனக்கு ஒரு பதில் சொல்ற வரையும் இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன்.. ரவியிடம் சண்டை போடும் ஸ்ருதி – சிறக்கடிக்க ஆசை ப்ரோமோ.

அவர் சொன்னது என்னவென்றால்.. இந்த சம்பவத்துக்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் நான் வற்புறுத்தியதால் தான் அவர் அப்படி பேசியதாகவும் லோகேஷ் கூறியிருந்தார் லியோ ட்ரைலரில் இடம் பெற்றுள்ள அந்த ஆபாச வார்த்தை கதைக்கும், அந்த கேரக்டருக்கும் மிகவும் தேவைப்பட்டது விஜய் இந்த வசனத்தை பேசலாமா என தயக்கத்துடன் தான் கேட்டார்.

ஆனால் நான் கண்டிப்பாக இது தேவை என அழுத்தமாக கூறியதால் தான் விஜய் பேசினார் என லோகேஷ் கூறியுள்ளார். மேலும் பேசிய லோகேஷ் விஜய் அப்படி கெட்ட வார்த்தை பேசியது யாருடைய மனதையும் கஷ்டப்படுத்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொள்வதாக லோகேஷ் தெரிவித்தார்.

“லியோ” ட்ரெய்லரை தொடர்ந்து மிரட்டும் ஹரால்டு தாஸ் புகைப்படம்.! குஷியில் ரசிகர்கள்

இந்த விளக்கம் நெட்டிசன்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது இந்த நிலையில் லோகேஷ் விளக்கத்துக்கு ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து “உருட்டு” என ஒரே வார்த்தையில் சொல்லி உள்ளார். இந்த பிரச்சனை இத்துடன் நின்று விடுமா அல்லது பூதாகரமாக பிடிக்குமா என்பது வருகின்ற நாட்களில் தான் தெரியும்..