ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் துணிவு இந்த படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று இந்த படத்தின் டிரைலர் மாலை 7 மணிக்கு ரிலீஸ் ஆனது அஜித் நெகட்டிவ் ரோலில் பயங்கரமாக நடித்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து மஞ்சு வாரியர், சமுத்திரகனி போன்றவர்களும் செம சூப்பராக நடித்துள்ளார்கள் என தெரியவந்துள்ளது இந்த ட்ரெய்லர் தற்பொழுது 10 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் டிரைலர் குறித்து பலரும்..
பல்வேறு விதமான கருத்துக்களை கொடுத்து வருகின்றனர். இந்த சமயத்தில் ப்ளூ சட்டை மாறன் அஜித்தின் துணிவு பட டிரைலரை பார்த்து விட்டு ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்… பீஸ்ட் மால் செட்.. துணிவு பேங்க் செட்.. என வின்னர் படத்தின் வடிவேலு போட்டோவை போட்டு கலாய்த்து உள்ளார்.
தொடர்ந்து இந்த திரைப்படம் குறித்தும் ஹச் வினோத்தையும் கலாய்த்தும் அடுத்தடுத்த பதிவை போட்டு வந்துள்ளார். தொடர்ந்து பதிவிட்டு வந்த அவர் கடைசியாக ஒரு பதிவில் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே என்று கேப்டனின் ஹாலிவுட் படமான இன்ஸைட் மேன் ட்ரைலரை ஷேர் செய்துள்ளார்.
2006 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் படமான inside man திரைப்படம் வங்கி கொள்ளையை பின்னணியாக வைத்தே உருவானது துணிவு படத்தின் டிரைலரும் அதே மாதிரியாக இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் படக்குழு பதில் அளிக்கும் என அஜித் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.