சில யூடியூப்பர்கள் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் அதில் பலரும் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த நானே வருவேன் திரைப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம் தந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வைரலாகி வருகிறது.
அதாவது தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று திரைப்படங்களும் தொடர்ந்து ஓடிடி வழியாக வெளியான நிலையில் இந்த மூன்று திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை மேலும் ரசிகர்கள் அடுத்த படமாவது திரையரங்குகளில் வெளியாகும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வந்த நிலையில் திரிச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து நடிகர் தனுஷ் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்து வந்த நிலையில் இந்த படத்தை செல்வராகவன் இயக்க தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் மேலும் இதில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களுடைய கூட்டணி இணைந்திருந்தது.
அந்த வகையில் புதுக்கோட்டை திரைப்படத்திற்குப் பிறகு இவர்களுடைய கூட்டணியில் இந்த திரைப்படம் உருவான நிலையில் இந்த திரைப்படத்தினை கலைப்புலி எஸ் தானும் தயாரித்து இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான நானே வருவேன் திரைப்படம் அண்ணன், தம்பி என இரண்டு கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோவாகவும், வில்லனாகவும் மிரட்டி உள்ள நடிகர் தனுஷ் மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை வேற லெவலில் அமைந்து இருந்தது இந்நிலையில் புளு சட்டை மாறன் நானே வருவேன் படத்திற்கு பாசிட்டி விமர்சனத்தை அளித்து ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். அதாவது வில்லன் கதாபாத்திரத்தை வலுவாக உருவாக்கியுள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்ததாக மாறன் தெரிவித்துள்ளார். மேலும் வில்லனான காட்சிகளை அதிகம் பயன்படுத்தி இருந்தால் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நானே வருவேன் படம் ஒரே நேரத்தில் ஹாரர் சைக்கோ திரில்லர் படம் பார்த்த திருப்தியை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார் புளு சட்டை மாறன். இவ்வாறு நல்ல படங்களிலேயே கழுவி ஊற்றும் இவர் திடீரென தனுஷின் நானே வருவேன் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் அளித்தது ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.