எந்த புது திரைப்படங்கள் வெளியானாலும் அதனை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர் அந்த வகையில் நன்றாக இருக்கும் திரைப்படங்களைக் கூட கேவலமாக இருப்பதாக விமர்சனம் செய்து வருபவர்களில் ஒருவர் தான் ப்ளூ சட்டை மாறன். படம் வெளி வந்தாலும் அதனை மோசமான விமர்சனங்களை தந்து வரும் ப்ளூ சட்டை மாறன் மீது ஏராளமான பிரபலங்கள் கடுப்பிலிருந்து வருகிறார்கள்.
இருந்தாலும் யார் பேச்சையும் கேட்காத ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து படங்களை விமர்சனம் செய்து வருகிறார் அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் ருத்ரன் படத்தினை கலாய்த்து இருக்கும் நிலையில் அது குறித்த ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ருத்ரன்.
இவருடைய நடிப்பில் கடைசியாக காஞ்சனா 3 திரைப்படம் வெளியான நிலையில் இந்த படம் படு தோல்வியினை பெற்றது மேலும் தொடர்ந்து இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் தோல்வியை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி ருத்ரன் படம் வெளியான நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வந்தனர் இந்நிலையில் ஆக்சன், ஹாரர் அனைத்தும் கலந்த படமாக உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் கழுவி ஊற்றியுள்ளார் அதாவது மொக்கையா படத்தை எடுத்துவிட்டு திடீரென ஒரு மெசேஜ் சொல்றேன்னு கொலையா கொள்ளுவான்களே.. அப்படி ஒரு படம் தான் இந்த ருத்ரன் என ஆரம்பத்திலேயே படத்தை மரண கலாய் கலாய்த்துள்ளார். அப்பா, அம்மாவை விட்டுட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு தனியா தவிக்க விட்டுடாதீங்க என்ற தத்துவத்தை எல்லாம் சொல்வது இருக்கட்டும் முதலில் நீங்க நடித்ததை நீங்களே போட்டு பாத்தீங்களா? இல்லையா? எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இஷ்டத்துக்கு எதிரிகளை பந்தாடும் ஆக்ஷன் காட்சிகளை வைத்திருக்கிறீர்களே இதுக்காக தெலுங்கு நடிகர் பாலைய்யாவிடம் பர்மிஷன் வாங்கினீர்களா.? அவர் படத்துல தான் இப்படி காட்சிகள் இருக்கும் இப்போ ராகவா லாரன்ஸ் படத்திலும் இப்படி சண்டை காட்சிகள் இருக்கே முடியலப்பா என வருத்தெடுத்துள்ளார்.