ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல விஜய், அஜித் ரசிகர்களிடையே கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன்.!

blue-sattai-maran
blue-sattai-maran

தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமலுக்குப் பிறகு தென்னிந்திய சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித். இதில் விஜய் அவர்கள் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதனை தொடர்ந்து அஜித்தும் தன்னுடைய துணிவு திரைப்படத்திலும் நடித்து முடித்து விட்டார்.

இந்த இரண்டு படங்களுமே வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் திரைப்படங்களை விமர்சித்து வரும் ப்ளூ சட்டை மாறன் விஜய் அஜித் ரசிகர்களுக்கு இடையே பழைய விஷயத்தை கொளுத்தி விட்டு ரசிகர்களிடம் திட்டுவாங்கி வருகிறார்.

அதாவது இந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படமும் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படங்களும் வெளியாகி ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் நல்ல வரவேற்பு பெற்றது இதில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை விட அஜித்தின் வலிமை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது என்று ப்ளூ சட்டை மாறன் சமூக வலைதளத்தில் இந்தப் பதிவை வெளியிட்டு ரசிகர்களிடையே கொளுத்தி போட்டு இருக்கிறார்.

அது எதற்காக என்றால் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் ஒரே தினத்தில் மோத உள்ளதால் இவ்வாறு செய்து உள்ளதாக ப்ளூ சட்டை மாறனை விஜய் அஜித் ரசிகர்கள் வெளுத்து கட்டி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரங்களின் படங்களான இந்த இரண்டு படங்களும் ஒரே தினத்தில் வெளியாக உள்ளதால் ஏற்கனவே பட குழுவினர் பதட்டத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலைகள் தியேட்டர் நிலவரம் குறித்து பேசிய ப்ளூ சட்டை மாறன் வாரிசு திரைப்படத்தை விட துணிவு திரைப்படத்திற்கு தான் அதிக திரையரங்குகள் ஒதுக்கி இருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் வாரிசு திரைப்படத்திற்கு வசூலில் கொஞ்சம் அடி வாங்கும் என்று ஒரு புரளியை கிளப்பி இருக்கிறார் புளு சட்டை மாறன்.

இவருடைய இந்த பதிவு விஜய் அஜித் ரசிகர்களுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது அது மட்டும் இல்லாமல் நீ என்ன அந்த படங்களின் தயாரிப்பாளரா உன்னுடைய ஆண்டி இந்தியன் படம் லட்சணம் எல்லாம் எங்களுக்கு தெரியாது என்று ப்ளு சட்டை மாறனை வாட்டி வறுத்தெடுத்து வருகிறார்கள் விஜய், அஜித் ரசிகர்கள்.