விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோ படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை விஜய் நிறைவு செய்துள்ளார் இதனை முடித்தவுடன் நேற்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்தார் விஜய். எப்பொழுதும் எந்த படம் வெளியானாலும் நடிகர்களை விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் கமெண்ட் தருவது மிகவும் அரிதான ஒன்று.
இப்படிப்பட்ட நிலையில் ப்ளூ சட்டை மாறன் திடீரென விஜயை ட்விட்டரில் பாராட்டியுள்ளார். அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது விஜய் மட்டுமல்லாமல் அவரது இயக்குனர் புஸ்ஸி ஆனந்த் என மக்கள் இயக்குனர் அனைவரையும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டி இருக்கும் நிலையில் எதற்காக என்ற கேள்வி எழும்பியுள்ளது. சினிமாவை பொருத்தவரை எந்த தமிழ் திரைப்படம் வெளியானாலும் அதனை ப்ளு சட்டை மாறன் விமர்சனம் செய்து வருகிறார்.
அப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான சூப்பர் ஸ்டார், ரஜினி, உலக நாயகன் கமல், விஜய், அஜித் போன்ற படங்கள் வெளியானால் அந்த படங்களை வச்சு செய்து விடுகிறார். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி விஜயை வம்பு இழுப்பதை வழக்கமாக வைத்திருப்பதனால் அவரது ரசிகர்களும் இவரை விடாமல் துரத்தி வருகிறார்கள். அப்படி விஜய் அரசியல் களமிறங்க இருப்பதாக கூறிவரும் நிலையில் இதனையும் பங்கமாக கலாய்த்திருந்தார்.
இந்நிலையில் திடீரென்று விஜயையும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் பாராட்டு தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளார். அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாறாம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என பாரதியாரின் கவிதையுடன் பாராட்டி டுவிட்டரில் பகிர்ந்து உள்ளார்.
இவ்வாறு திடீரென ஏன் ப்ளூ சட்டை மாறன் விஜயை பாராட்டுகிறார் திடீரென காட்சி மாறிவிட்டாரோ என கூறப்பட்ட நிலையில் ஆனால் இதற்கெல்லாம் காரணம் விஜயின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ள பேட்டி தான் என தெரியவந்துள்ளது. அதாவது கடலூரில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இரவு நேர பாடசாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்த உள்ளதாகவும் இது குறித்து விரைவில் விஜய் அறிவிப்பார் அன்றும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து விஜய்யும் அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளையும் ப்ளூ சட்டை மாறன் பாராட்டி இருக்கும் நிலையில் இதனைப் பார்த்து ரசிகர்கள் உங்களின் இந்த அணுகுமுறை பிடித்துள்ளதாக கமெண்ட் செய்துள்ளனர். அதற்கு பதிலளித்த ப்ளூ சட்டை மாறன் நல்ல விஷயங்களை யார் செய்தாலும் அதனை பாராட்டுவேன் என வெளிப்படையாக கூறியுள்ளார். இவ்வாறு இது குறித்த தகவல் மீடியாவில் வைரலாகி வருகிறது.