முதல் முறையாக “நடிகர் அஜித்தை” புகழ்ந்து பேசிய ப்ளூ சட்டை மாறன்..! இதுதான் 8 -வது அதிசயம்

Actor Ajith
Actor Ajith

Blue sattai maran : திரையில் ஒரு புது படம் வெளி வந்தால் அந்த படத்தை விமர்சிக்க பல youtube விமர்சகர்கள் இருக்கின்றனர் அவர்களில் ஒருவர் ப்ளூசட்டை மாறன். இவர் பெரிய நடிகர், நடிகைகள் தொடங்கி சின்ன நடிகர், நடிகைகள் வரை யாரையும் பாரபட்சம் பார்க்காமல் விமர்சித்து வருகிறார்.

குறிப்பாக டாப் நடிகர்கள் இவருக்கு கைவந்த கலை..  விஜய், அஜித் போன்ற நடிகர்களை வச்சு செய்வார் குறிப்பாக அஜித்தை உருவ கேலி செய்து இவர் போட்ட பதிவுகளும் யாராலும் பேச்சுகளும் யாராலும்.. இதனால் ரசிகர்கள் இவரை எப்பொழுதுமே சமூக வலைதள பக்கங்களில் வறுத்தெடுப்பது உண்டு.

இப்படிப்பட்ட ப்ளூசட்டை மாறன் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸுக்கு ஒரு நல்ல விமர்சனம் கொடுத்தார் அதனை தொடர்ந்து தற்பொழுது அஜித்தை பற்றி அவர் புகழ்ந்து பேசியது சோசியல் மீடியா பக்கம் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு படம் ஹிட்டு அடித்து விட்டால் அதை பிற மொழிகளில் ரீமேக் எசெய்கின்றனர். அப்படித்தான் அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் சிரஞ்சீவி “போல சங்கர்” என்ற பெயரில் நடித்தார்.

படம் வெளியாகி தற்போது ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்திற்கு விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன். வேதாளம் ஒரிஜினல் பழைய கதையாக இருந்தாலும் அது ரசிக்கும்படி இருந்தது அஜித்தின் நடிப்பு எதர்த்தமாகவும், ரசிக்கும் படியும் இருந்தது என அஜித்தை பற்றி புகழ்ந்து பேசினார்.

மேலும் பேசி அவர் அஜித் நடித்த அந்த காட்சிகளில் நடித்தால் cringe ஆக இருக்கும் என நினைத்து சிரஞ்சீவிக்கு வேறு காட்சிகளை வைத்து படத்தை எடுத்தனர் அது சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை என கூறினார். இதைப் பார்த்த அஜித் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனாக இது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றர்.