பரோட்டா மாவு பிசைவது போல் ஒரு டான்ஸ் வலிமையை மோசமான விமர்சித்த ப்ளுசட்டை மாறன்.! பொங்கி எழுந்த தயாரிப்பாளர்.

valimai
valimai

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் ஒன்றை மோசமாக விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் வெளுத்து வாங்கியுள்ளார்..

ரஜினி அஜித் விஜய் என மிகப் பெரிய நடிகர்களின் படமாக இருந்தாலும் அந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை மட்டுமே கொடுத்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது அது மட்டும் இல்லாமல் ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கடினம் அந்த படத்தை இவ்வளவு மோசமாக விமர்சித்தால் யார் பார்ப்பார்கள் என ஏற்கனவே பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என  ப்ளு சட்டை மாறன் மீது செம காண்டில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அஜித்தின் வலிமை படத்தையும் அதே போல் மோசமாக நெகட்டிவ் விமர்சனம் செய்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் ப்ளூ சட்டை மாறன் பரோட்டாவிற்கு மாவு பிசையும் இந்த டான்ஸை திரையரங்கில்  யார் சிரிக்காமல் பார்த்தார்கள் என ஒரு பதிவு செய்துள்ளார்.

இவர் செய்துள்ள பதிவை பார்த்த அஜித் ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் ப்ளூ சட்டை மாறனை வெளுத்து வாங்கி வருகிறார்கள் இந்த நிலையில் இது குறித்து பிரபல தயாரிப்பாளர் ஒருவரான தனஞ்செழியன் படத்திற்கு எந்த சம்மந்தமும் இல்லாத ஒரு கமெண்டை அவர் இவ்வாறு பதிவு செய்துள்ளது என்னை ஏமாற்றம் அடையச் செய்தது.

அதுமட்டுமில்லாமல் கோபமடையாவும் செய்துள்ளது இதை நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாது அவர் ஒரு நல்ல மனிதராக இருந்தால் பரவாயில்லை குறைந்தபட்சம் ஒழுக்கமான மனிதராகவது இருக்க வேண்டும் இதை அவர் புரிந்துகொள்வார் என நம்புகிறேன் என அவரின் பதிவிற்கு தரமான பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார் இந்த பதிவிற்கு பல ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.