ஜெயிலர் வசூல் ரிப்போர்ட் டுபாக்கூர் ரிப்போர்ட்.. எனக்கு ஏன் வயிறு எரிய போது.? ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

blue sattai maran
blue sattai maran

Jailer Movie Collection: ஜெயிலர் படத்தின் வசூல் ரிப்போர்ட் சோசியல் மீடியாவில் நாள்தோறும் வெளியாகி வரும் நிலையில் இதனை ப்ளூ சட்டை மாறன் டுபாக்கூர் ரிப்போர்ட் என தெரிவித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் திரைப்படம் கடந்த 10 அன்று உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டையை குவித்து வருகிறது.

இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான தகவல்களை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார்கள். தர்பார், அண்ணாத்த போன்ற தோல்வி படங்களுக்க பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்த ரஜினி தனது 72 வயதிலும் தான் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்து காண்பித்துள்ளார்.

அப்படி ஜெயிலர் படம் வெளியான முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் 49 கோடி வசூல் செய்த நிலையில் உலக அளவில் 70 கோடி ரூபாய் செய்ததாக தகவல் வெளியானது. மேலும் பாசிட்டி விமர்சனங்களுடன்  வசூல் அதிகரித்தது. ரசிகர்களும் ஜெயிலர் படத்தினை பார்ப்பதற்காக திரையரங்குகளில் குவிந்தனர்.

அப்படி ஜெயிலர் படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதுவரையிலும் 400  கோடி ரூபாய் வசூல் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்படி கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூலை ஜெயிலர் படம் முறியடித்து விடும் என்று ரஜினியின் ரசிகர்கள் உறுதியுடன் இருந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இன்னும் சில நாட்களில் 500 கோடி ரூபாயை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டுள்ளார். அதாவது இன்னைக்கு 500 கோடியை தாண்டி பொன்னியின் செல்வனை காலி பண்ண போறோம். இதையெல்லாம் பார்த்தா உனக்கு வயிறு எரியல? எனக்கு ஏம்ப்பா எரியப் போகுது? நீங்க சொல்றது எல்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சு போனதால ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் உங்ககிட்ட திரும்பவும் ஏதாவது கேள்வி கேட்டா.. 700 கோடி வசூலை ஏத்தி விடுவீங்க என குறிப்பிட்டு கவுண்டமணி செந்தில் வீடியோவை பகிர்ந்துள்ளார்.