அஜீத்தை தொடர்ந்து விஜய்யையும் சீண்டிப்பார்க்கும் ப்ளூ சட்டை மாறன்.! அதுக்குன்னு இப்படி ஒரு கேள்வியா.? கொதித்தெழுந்த ரசிகர்கள்

vijay-bluesattai-maran
vijay-bluesattai-maran

தளபதி விஜய் தன்னுடைய அறுபத்தி ஐந்தாவது திரைப்படமாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் அபர்ணா தாஸ்,  யோகிபாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது இதற்குமுன் சர்க்கார் திரைப்படத்தையும் தயாரித்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமில்லாமல் மூன்று பாடல்களும் வெளியாகியது இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு.

இந்த நிலையில் படத்திற்கான முன்பதிவு சமீபத்தில் தொடங்கப்பட்டது. பீஸ்ட் திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த முடியாமல் போனதால் பீஸ்ட் படக்குழு முழுவதும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்கிறார்கள் இதில் விஜய் அவர்களும் கலந்து கொள்கிறார் இந்த நிலையில் நெல்சன் விஜய்யிடம் பல சுவாரசியமான கேள்விகளை கேட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கால் பத்தி வீட்டு திருமணம் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் விஜயும் சந்தித்துக் கொண்டார்கள் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. அதுமட்டுமில்லாமல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி யையும் விஜய் சந்தித்துள்ளார் அது எதற்காக என பலரும்   குழப்பத்தில் இருந்த நிலையில். தற்பொழுது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்று டிக்கெட் விலையை மூன்று மடங்காக உயர்த்துவதகா புதுச்சேரி அரசு அனுமதி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை பார்த்த சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய ட்விட்டரில் தலைவா, மாஸ்டர், பீஸ்ட் என தனது பட ரிலீஸ் சமயத்தில் மட்டும் 100% அனுமதி டிக்கெட் உயர்வு சிறப்பு காட்சி அனுமதி கேட்டு தமிழகம் மற்றும் புதுவை முதல்வரை சந்தித்து வரும் விஜய்  இதேபோல் ரிலீஸ் சமயம் அல்லாத நாட்களில் மக்கள் நலனுக்காக அடிக்கடி முதல்வர்களை சந்திப்பாரா தமிழக மக்கள் கேள்வி. புதுவை முதல்வரை விஜய் இதற்க்காகாதான் சந்தித்தாரா என சினிமா விமர்சகர் கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார்.

இதற்கு முன் அஜித்தை விமர்சனம் செய்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் தற்போது விஜய்யும் விமர்சனம் செய்துள்ளார் இதை பார்த்த விஜய் ரசிகர்கள்  சும்மா விடுவார்களா என வச்சி செய்துவருகிறார்கள் ப்ளூ சட்டை மாறனை.