விஜயை வைத்து சூர்யாவின் ‘கங்குவா’ கிளிம்ஸ் வீடியோவை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. கடுப்பில் ரசிகர்கள்

blue sattai maran
blue sattai maran

Kanguva: நடிகர் சூர்யா நடித்திருக்கும் கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை ப்ளூ சட்டை மாறன் விமர்சித்து இருக்கும் நிலையில் இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் சூர்யா சமீப காலங்களாக வெற்றி திரைப்படங்களை தந்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற ரோலில் நடித்து மிரட்டினார். இதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் 10 மொழிகளில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் இதனை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியின் அடுத்த வருகிறார். இந்நிலையில் சூர்யா 5 விதமான கெட்டப்புகளில் நடித்திருக்கும் நிலையில் தற்பொழுது கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் அந்த வீடியோவை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், அவர் அடேங்கப்பா பில்டபுலாம் ஓவரா இருக்கு ப்ளீஸ் போஸ்டருக்கு மூணு போஸ்டர் அது என்ன சட்டை? சட்டைக்குள் இன்னொரு சட்டை என்று தமிழன் படத்தில் வெளிவந்த விஜய்யின் காமெடியை பதிவிட்டு இருக்கிறார் இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் கடுப்பில் ப்ளூ சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

BLUE SATTAI MARAN
BLUE SATTAI MARAN

3d தொழில்நுட்பம் மூலம் உருவாகி வரும் கங்குவா படம் 1500 ஆண்டுகளுக்கு முந்தைய கலக்கட்டத்தை வைத்து உருவாகி வரும் நிலையில் இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்டவர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.