இதனால்தான் படம் ஊத்திக்கிட்டுதா.? ஓவர் சீன் என்று விக்ரமை வம்பு இழுக்கும் ப்ளூ சட்டை மாறன்

vikram
vikram

Blue sattai Maran: தொடர்ந்து திரைப்படங்களையும், திரை பிரபலங்களையும் விமர்சனம் செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் இன்று நடிகர் விக்ரமை ஓவர் சீன் என்று ட்வீட் செய்துள்ளார். கல்கி எழுதிய நாவலான பொன்னியின் செல்வன் சோழர் காலத்தில் நடந்த உண்மை சம்பவங்களையும், அவரது கற்பனையையும் மையமாக வைத்து எழுதினார்.

பொன்னியின் செல்வன் நாவலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இதனை படமாக்க வேண்டும் என பலரும் விரும்பி வந்தார்கள் அப்படி மணிரத்தினம் பொன்னியின் செல்வன் கதையினை இரண்டு பாகங்களாக இயக்கினார்.

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரபட்டலங்கள் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி பலரையும் கவர்ந்த நிலையில் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது இந்த படம் சொல்லும் அளவிற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இவ்வாறு இதற்கிடையில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன்காக லைகா நிறுவனம் பெரிய தொகையை செலவழித்து படக்குழுவினர்களுக்கு தனி விமானம் ஏற்பாடுகளையும் செய்தனர்

இவ்வாறு பட குழுவினர்களும் இந்தியாவின் பெரும்பாலான இடங்களுக்கு சென்று ப்ரோமோஷன் செய்தனர். அப்படி ப்ரோமோஷனில் விக்ரம் அணிந்து வந்த ஆடைகள் ரசிகர்களை பெரிதளவிடம் கவர்ந்தது. மேலும் சில ரசிகர்கள் விக்ரம் கொஞ்சம் ஓவராக ஆடம்பரம் காட்டுகிறாரோ என விமர்சனம் செய்தார்கள்.

அதோடு மட்டுமல்லாமல் ப்ரமோஷனுக்கு வர வேண்டும் என்றால் தனி விமானம் வேண்டும் என்று கண்டிஷன் போட்டதே விக்ரம் தானாம். எனவே ப்ளூ சட்டை மாறன் பொன்னியின் செல்வன் 2 ப்ரோமோஷனின் பொழுது எடுக்கப்பட்ட விக்ரமின் புகைப்படத்தை பதிவு செய்து, இப்படி ஓவர் சீன் போட்டதால் தான் ஊத்திக்கிட்டுதா ps 2 என்று கேள்வி எழுப்பிவுள்ளார்.