சிம்புவுக்கு சாட்டையடி பதில் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்.! சின்ன பள்ளத்தாக்குன்னா என்ன சிம்பு சார்…?

blu-sattai-maran-vs-simbu--5634

கௌதம் மேனனின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ ஆர். ரகுமான் இசையில் வெளியாகிய திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இவர்கள் மூவரும் மூன்றாவது முறையாக இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் வெந்து தணிந்தது காடு திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது சிம்பு திரைப்படத்தில் மிக முக்கிய திரைப்படமாக இந்த திரைப்படம் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை சக்சஸ் மீட் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு நடைபெற்றது அந்த சக்சஸ் மீட்டில்  வெந்து தணிந்தது காடு படகு குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள் மேலும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு உடல் எடையை குறைந்து வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் அதனால் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது இதற்கு முன் சிம்புவின் நடிப்பில் வெளியாகிய ஈஸ்வரன் மாநாடு திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

நான்கு நாளில் வெந்து தணிந்தது காடு பல கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது வெந்து தணிந்தது காடு சக்சஸ் மீட்டில் பேசிய சிம்பு இந்த திரைப்படம் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது. மேலும் இது கேங்ஸ்டர் திரைப்படம் இல்லை என்றும் ஒரு இளைஞன் எப்படி கேங்ஸ்டாராக மாறுகிறார் என்பதுதான் கதை எனவும் கூறினார்.

அதேபோல் இரண்டாவது பாகம் கேங்ஸ்டர் கதையாக வரும் எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய உடலை வைத்து அதிகப்படியான ஷேமிங்குகளை செய்ததாகவும்  இதுபோன்று நடந்து கொள்ள வேண்டாம் என ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக கோரிக்கை வைத்தார் இதை பார்த்த ப்ளுசட்டை  மாறன் சிம்புவின் கோரிக்கைக்கு சாட்டையடி பதில் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகிய குத்து என்ற திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து ஒரு பாடலில் ஆடினார் அதில் பாஞ்சுடலாமா நல்லதாக்கு பாவம் சின்ன பள்ளத்தாக்கு என்ற வரிகள் வரும் ஒரு பெண்ணின் உடல் குறித்து கேவலமான வரிகளுடன் கூடிய பாடலில் சிம்பு நடித்திருந்தார் இந்த பாடலில் வரும் பள்ளத்தாக்கு என்ற   வார்த்தைக்கு என்ன அர்த்தம் என சிம்புவை பார்த்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப் பாடலை எழுதிய பாடல் ஆசிரியார் மட்டும்  குற்றம் சாட்டி தப்பிக்க நினைக்காதீர்கள் என சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளார். சிம்பு அமைதியாக இருந்தாலும் அவரை தொடர்ந்து சர்ச்சை சுற்றிக் கொண்டே வருகிறது அதிலிருந்து எப்படி தான் தப்பிக்க போகிறாரோ.

kuthu
kuthu