புதிய படம் வந்தாலே அந்த திரைப்படத்தை பலரும் விமர்சனம் செய்து வீடியோவை வெளியிடுவார்கள் அந்த வகையில் எந்த திரைப்படமாக இருந்தாலும் அந்த திரைப்படத்தின் பெயரை குறிப்பிட்டு வெளிப்படையாக தன்னுடைய கடுமையான விமர்சனங்களை கூறி வருபவர் ப்ளூ சட்டை மாறன்.
அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய சமூக வலைதளமான டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் யாரை சொல்கிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். எந்த ஒரு புது படமாக இருந்தாலும் அதனை கடுமையாக விமர்சனம் செய்வார் ப்ளூ சட்டை மாறன் அந்தவகையில் சமீபத்தில் வெளியாகிய வலிமை திரைப்படத்தினை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அதில் அஜித்திற்கு ஆடவே தெரியவில்லை எனவும் கூறியிருந்தார் அதுமட்டுமில்லாமல் படத்தை பற்றி பேசாமல் அஜித்தை தாக்கியது பிரபலங்களின் கோபத்தை அதிகப்படுத்தியது அதனால் பலரும் மீடியாவிலும் சினிமா விழாக்களிலும் கடுமையாக ப்ளூ சட்டை மாறனை எச்சரிக்கை செய்தார்கள்.
அந்தப் பிரச்சினை ஓய்ந்து முடிவதற்குள் அடுத்ததாக OTT இணையதளத்தில் வெளியாகிய டானா காரன் திரைப்படத்தை பாராட்டியும் ட்வீட் ஒன்றை செய்துள்ளார் அதேபோல் பீஸ்ட் பற்றி நேற்று தங்களுடைய சமூகவளைதலத்தில் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்கள் அந்த ட்வீட்டில் பீஸ்ட் படத்தை மீம்ஸ் மூலம் கலாய்த்தார்.
இந்த நிலையில் திடீரென தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், டானாகரன் போன்ற தரமான படங்கள் எல்லாம் OTT யில் வருகிறது OTT கூட பார்க்கவே முடியாத மொக்கை திரைப்படங்கள் எல்லாம் திரையரங்கிற்கு வருகிறது என கூறியுள்ளார்.
மேலும் உண்மையான சினிமா ரசிகர்களின் ஆதங்கம் எனவும் டுவிட் செய்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இவர் எந்த படத்தை மொக்கை படம் என்று கூறுகிறார் ஒருவேளை ஆன்ட்டி இந்தியன் திரைப்படத்தை கொள்கிறாரோ நீங்கள் எதை சொல்லுறீங்க கொஞ்சம் விளக்கமாக சொன்னால் நல்லாயிருக்கும் என ப்ளூ சட்டை மாறனை எச்சரித்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தியேட்டரில் கொண்டாடப்பட வேண்டிய சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், டாணாக்காரன் போன்ற தரமான படங்கள் எல்லாம் OTT யில் வருகிறது.
OTT யில் கூட பார்க்க முடியாத மொக்கை படங்கள் எல்லாம் தியேட்டருக்கு வருகிறது – உண்மையான சினிமா ரசிகர்கள் ஆதங்கம்.
— Blue Sattai Maran (@tamiltalkies) April 14, 2022