அஜித்திற்கு இணையா ரஜினியா.? யாரைப் போய் யாரோட கம்பேர் பண்றீங்க.! பூகம்பத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்

rajinikanth
rajinikanth

Rajini vs Ajith: தர்பார், அண்ணாத்த போன்ற தோல்வி திரைப்படங்களுக்கு பிறகு ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுத்திருக்கும் நிலையில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் உள்ள வரவேற்பினை பெற்று வருவதனால் இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்து ரஜினிகாந்த் ஆசீர்வாதம் வாங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்று தனி மனித ஒழுக்கத்தில் அஜித்துக்கு இணையான ஹீரோ கிடையாது என ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க சன் பிரேக்சஸ் நிறுவனம் தயாரித்தது முதல் வாரம் வசூலில் கல்லா கட்டிய ஜெயிலர் இரண்டாவது வாரத்தில் தள்ளாடி வருகிறது. இதற்கிடையில் தான் ரஜினி உபி முதலமைச்சர் யோகி காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். உபி சென்ற ரஜினிகாந்த் அம்மாநில ஆதித்யநாத் உடன் சேர்ந்து ஜெயிலர் படம் பார்த்து மகிழ்ந்தார்

ஆனால் மாநில துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மவுரியா மட்டுமே ரஜினியுடன் ஜெயிலர் படம் பார்த்தார். அப்பொழுது கூட அவர் பாதியிலேயே சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது இவ்வாறு தமிழ்நாட்டு ரசிகர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியதுm எனவே சமூக வலைதளங்களில் ரஜினிக்கு எதிராக பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரஜினியை தொடர்ச்சியாக ட்வீட் செய்து வரும் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள் அஜித்தின் போட்டோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்கள். அதாவது, ஒரு சினிமா விழாவின்போது அமிதா பச்சன் காலில் விழுந்து அஜித் ஆசிர்வாதம் வாங்கிய போட்டோவை ஷேர் செய்து அது எல்லாம் கண்ணுக்கு தெரியாதா என்று ட்ரோல் செய்த நிலையில் இதனையடுத்து இதற்கு ப்ளூ சட்டை மாறன் பதில் கூறியுள்ளார்.

blue sattai maran
blue sattai maran

அதாவது, அமிதாப் பச்சன் கலை துறையில் சீனியர் வயதில் பெரியவர், அஜித்தை வைத்து உல்லாசம் படம் எடுத்த தயாரிப்பாளர், அந்த மரியாதைக்கு காலில் விழுந்து வணங்கினார். இதேப்போய் கபாலி மெட்டரோட மேட்ச் பண்ணாதீங்க அஜித்தின் படங்கள் பிடிக்காமல் போகலாம் ஆனால் தனிமனித ஒழுக்கத்துல அவருக்கு இணையான ஒரு மனிதன் ஸ்டார் இங்கு கிடையாது. கருப்பு பணத்தை பதுக்குவங்களுக்கே இவ்வளவு கொழுப்பு இருந்தா நேர்மையா வரி காட்டுற இவருக்கு எவ்வளவு இருக்கும் ஆகவே.. ‘Do not dare to touch Ajith on such issues’ எனப் பதிவு செய்துள்ளார்.