நெகட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறனை தனது பாணியில் சவுக்கடி பதில் கொடுத்த அஜித்.! வைரலாகும் பதிவு.!

valimai
valimai

அஜித் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வலிமை திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றாலும் ஒருசிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள் இந்த வலிமை திரைப்படத்தை வினோத் அவர்கள் தான் இயக்கியிருந்தார் போனிகபூர் அவர்கள் தயாரித்த இருந்தார்கள்.

மேலும் இந்த திரைப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் மோசமாக விமர்சனம் செய்தார் அதுமட்டுமில்லாமல் நாங்க வேற மாதிரி என்ற வலிமை திரைப்படத்தின் பாடலில் அஜித்தின் புகைப்படத்தை ஷேர் செய்து அவரின் நடத்தை மோசமாக கேலி செய்தார் அதாவது பரோட்ட மாவு தயாரிப்பது போல் காட்சியளிக்கும் இந்த பாடலுக்கு சிரிக்காதவர் யார் எனக் கேட்டுள்ளார்.

இந்த பதிவு அஜித்தை கேலி செய்யுமாறு இருந்ததால் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள் ஒரு படத்தை விமர்சிப்பது அவரவர் பார்வையில் இருக்கிறது ஆனால் படத்தில் நடிக்கும் நடிகர்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது என பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் ஆர்கே சுரேஷ், பிக்பாஸ் நட்சத்திரம் ஆரி, கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த மோசமான ட்வீட் குறித்து தங்களது கருத்தை தெரிவித்து வந்தார்கள். இந்தநிலையில் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா  தனது ட்விட்டர் பதிவில் ரெட் பட அறிக்கையை பகிர்ந்துள்ளார்.

சுரேஷ் சந்திரா அஜித் இன் அறிக்கையை மறுட்விட் செய்துள்ளார் அந்த ட்விட்டரில் ரசிகர்கள் வெறுப்பாளர்கள் மற்றும் நரம்புகள் ஒரே நாணயத்தின் மூன்று பக்கங்கள் நான் ரசிகர்களின் அன்பையும் வெறுப்பின் வெறுப்பையும் நடுநிலையாளர்களின் பாரபட்சமற்ற கருத்துகளையும் மனதார ஏற்றுக் கொள்கிறேன் வாழ்க மற்றும் வாழலாம் நம் அதனை ஏற்று அன்பு எப்பொழுதும் அஜித்குமார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது உச்சத்தில் இருக்கும் அஜித் இவ்வாறு கூறியுள்ளது அவர்களுக்கு சாட்டையடி பதிலாக இருந்திருக்கும்.