திருச்செந்தூரில் முருகரு.. ரோகிணியில ஜெயிலர்.. ரஜினி ரசிகர்களின் மிரட்டலுக்கு பயப்படாமல் முதல் நாளே படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் சொன்ன ப்ளூ சட்டை .!

blue sattai maran
blue sattai maran

Blue sattai Maran: விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தமிழ் திரைவுலகில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தையும் விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு நடைபெறும் திரைப்படங்களைக் கூட கேள்வி கிண்டல் செய்து வருவதனால் ரசிகர்கள் இவரின் மேல் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித் என யாருடைய படமாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தனது விமர்சனத்தை முன்வைத்து வருகிறார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவரையும் கிண்டல் செய்து வரும் நிலையில் இவருடைய விமர்சனங்களை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

அப்படி ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரே நாளில் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி தனது கம்பேக் கொடுத்துள்ளார். இவ்வாறு இந்த படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இதனை தொடர்ந்து ரஜினியின் ஜெயிலர் படத்தினை ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சனம் செய்ய ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

ஏற்கனவே ஜெயிலர் படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் ரசிகர்கள் மத்தியில் சவால் விட்டிருந்தார் அப்படி நேற்று ஜெயிலர் படத்தினை பார்த்து விட்டு இன்று விமர்சனத்தை தெரிவித்துள்ளார். அதில் எதிர்பார்த்தது போலவே இந்த படத்தை கழுவி ஊற்றி இருக்கிறார். மேலும் ‘டார்க் காமெடி படம் என்றால் நடிப்பவர்கள் சீரியஸாக இருப்பார்கள் பார்க்கும் நமக்கு காமெடியாக இருக்கும் ஆனால் இங்கே படத்தில் காமெடி செய்கிறார்கள் பார்க்கும் நமக்கு தான் சீரியஸாகி ஆகிவிடுகிறது என்று ட்ரோல் செய்து விடுகிறார்.

மேலும் அவர் விமர்சனம் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தர்பார், அண்ணாத்த போன்ற படங்களுக்குப் பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ரஜினி ஜெயிலர் படத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளார். ஜெயிலர் படத்தினை இயக்கிய நெல்சன் திலீப்குமாரும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.