திறமைக்கு பார்வை தேவையில்லை என நிரூபித்த சிறுமி.! பாராட்டிய இசைப்புயல்.. விக்ரமின் பாடலுக்கு என்னமா இசையமைக்கிறார்.! வைரலாகும் வீடியோ

arr rahman
arr rahman

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சரிகமப  என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் சுஹானா. இவர் பிறவியிலேயே பார்வை இழந்தவர்.

சுஹானா பாடுவதில் வல்லவர் அதுமட்டுமில்லாமல் கீபோர்டு இசை அமைப்பதிலும் சிறந்து விளங்குகிறார், இந்தநிலையில் சமீபத்தில் இரண்டு நாள்களுக்கு முன்பு விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படத்திலிருந்து தும்பி துள்ளல் என்ற பாடலுக்கு சுஹானா இசையமைத்துள்ளார்.

அந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். கோப்ரா திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார், இந்த வீடியோவை பார்த்து ஏ ஆர் ரகுமான் வாழ்த்து கூறி ட்வீட்  செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த  மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் அவருக்கு இசைக்கருவி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் சுஹானாவின் ட்விட்டரில் லலித் குமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் தன்னை ஊக்கப்படுத்திய ஏ ஆர் ரகுமானுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சுகானா ஒரே நேரத்தில் இரண்டு கைகளையும் கீபோர்டில் வைத்து ஒரு தீம் பாடலுக்கு இசையமைத்துள்ளார் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.