அழகாக இருந்தால் தான் சினிமாவில் வளர முடியும் என்ற ஒரு பிம்பம் இன்றளவும் இருந்து கொண்டு தான் இருக்கிறது அதை அவ்வபோது அசைத்துப் பார்த்து வருகின்றனர் கருப்பு நடிகைகள்.. கருப்பாக இருந்தாலும் நடிப்பில் பின்னி பெடல் எடுக்கும் 5 தமிழ் நடிகைகள் பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க இருக்கிறோம்..
- ஐஸ்வர்யா ராஜேஷ் : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த கைத்தட்டல் வாங்கினார் ரம்மி படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் ஹீரோயின்னாக நடித்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றார். இதனால் நயன்தாராவுக்கு அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் என பேசப்பட்டது.
2. பிரியாமணி : ரொம்பவும் அழகு கிடையாது ஆனால் கொடுக்கக்கூடிய கதாபாத்திரங்களில் எப்பொழுதுமே பின்னி பெடலெடுக்க கூடியவர் அப்படி இவர் நடித்த பருத்திவீரன், சாருலதா, மது மலைக்கோட்டை போன்ற படங்களில் நடிப்பு திரையை காட்டி இருப்பார். இப்பொழுதும் இவரது திறமையை நம்பி வாய்ப்புகள் குவிந்து கொண்டுதான் இருக்கிறது.
3. அஞ்சலி : கற்றது தமிழ் என்ற படத்தில் நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார் அதன் பிறகு அங்காடி தெரு, எங்கேயும் எப்பொழுதும், வத்திக்குச்சி போன்ற படங்களில் தனது அசாதாரணமான திறமையை காட்டி நடித்திருப்பார் ஆள் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இல்லை என்றாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் திறமையை காட்டி வெற்றி பெறக்கூடியவர் அஞ்சலி என்பது குறிப்பிடத்தக்கது.
4. நடிகை சரிதா : ரஜினி, கமல், பாக்கியராஜ் என தொடங்கி இப்பொழுது காலகட்டத்தில் இருக்கும் நடிகர்கள் வரை பலருடன் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இவர் கடைசியாக நடித்த மாவீரன் திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது இவருடைய நடிப்பு அதில் பெரிய அளவில் பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
5. ராதிகா : 80,90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்தவர். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்ற பல நடிகர்களுடன் நடித்து திறமையை வளர்த்தார். இப்பொழுதும் அவருடைய திறமையை பார்த்து வாய்ப்புகள் குவிந்து கொண்டே இருகின்றன.