சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தொலைக்காட்சிகளில் இருக்கும் தொகுப்பாளினிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியின் செல்லப் பிள்ளையாக இருந்து வருபவர் நடிகை டிடி.
இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் முதன் முதலாக உங்கள் தீர்ப்பு என்ற நிகழ்ச்சியின் மூலம் முதன்முறையாக அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.
பின்பு ஒரு கால கட்டத்தில் தன் நட்பில் இருந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒரு காலகட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் இந்த நிலையில் டிடி தனியாக வாழ்ந்து வருகிறார்.
தற்பொழுது டிடி தொகுப்பாளினியாக பணியாற்றுவதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் சினிமாவிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் கருப்பு நிற சுடிதாரில் ஆளை மயக்கும் வசீகர பார்வையால் ரசிகர்களை கொள்ளை கொண்டுள்ளார். அந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.