பல சினிமா பிரபலங்களும் எதிர்பார்ப்பது தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தை தான் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூல் செய்துவிட்டது தமிழ்நாடு முழுவதும் 1000திரையரங்குகளில் குறையாமல் வெளியாகி வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது பொதுவாகவே தளபதி விஜய் நடிக்கும் திரைப்படங்களை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வருவதால் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் நடிக்கும் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.
அதேபோல் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
டெல்லியில் முக்கியமான ஆக்ஷன் காட்சி எடுக்கப்பட இருக்கிறது அதற்காக படக்குழு கூடிய சீக்கிரம் டெல்லி செல்ல உள்ளதாக இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் தளபதி விஜய் ரசிகர்கள் பலரும் எப்பொழுது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்த்து வருகிறார்கள்.
Team #Beast wishes the talented actor #ShineTomChacko a very Happy Birthday!#HappyBirthdayShineTomChacko #HBDShineTomChacko pic.twitter.com/kUmEehyz70
— Sun Pictures (@sunpictures) September 15, 2021
ஒரு சில ரசிகர்கள் தளபதி விஜய் தனது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனருடன் கைகோர்ப்பார் என்பது எப்பொழுது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என கேட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் hine Tom Chackoவுக்கு இன்று பிறந்த நாள் இதற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.