அசாதாரணமான நடிப்பின் மூலம் தமிழை தாண்டி தற்போது கோலிவுட், பாலிவுட் போன்ற பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். தமிழில் கர்ணன், ஜகமே தந்திரம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
அதை தொடர்ந்து மீண்டும் தமிழில் தனது 43வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் தனுஷ் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதன் பிறகு தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் புதிதாக கை கோர்த்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவும் தனுஷ் வரவேற்க கொடுக்க ரெடியாக இருக்கிறது அதற்கு முக்கிய காரணம் அவர் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பு நிறுவனம். தனுஷ் சுமாரான படத்தையே தனது நடிப்பின் மூலம் சூப்பர் டூப்பர் வெற்றிப்படமாக மாற்றுவார் அதனால் அவரை வரவேற்க காத்து இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனுஷின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு “இளைய சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டனர்
ஏற்கனவே இது தொடரி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இளைய சூப்பர் ஸ்டார் என அடைமொழியை கூப்பிட்டு அழைத்தனர் அதற்கு தனுஷ் எனது திறமைக்கு மீறி நீங்கள் புகழாதீர்கள் என எனக்கூறி அழைப்பதை தடுத்தார் தற்போது தெலுங்கு சினிமா இவ்வாறு செய்திருப்பது தற்பொழுது பலருக்கும் குழப்பதை ஏற்படுத்தி உள்ளது
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.