தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜின் மகனாக சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகர் சிபி சத்தியராஜ். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமான இவர் தற்பொழுது வரையிலும் தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றுதான் கூற வேண்டும். சிபிராஜ் கடந்த 2003ஆம் ஆண்டு ஸ்டூடன்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். பிறகு தன்னுடைய தந்தையின் ஆதரவுடன் சில திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் நாய்கள் ஜாக்கிரதை என்ற திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மேலும் அடுத்தடுத்து திரைப்படங்கள் நடித்துவரும் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த வட்டம் என்ற திரைப்படமும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படிப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இரண்டு தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் சிபிராஜ் தனது மனைவியுடன் கோவையில் நடந்த திருமண விழாவிற்கு சென்று உள்ளார் அவ்வப்போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் கிடைத்து வருகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு சிபிராஜின் தங்கை திவ்யா சத்யராஜ், நடிகர் பிரசன்னா உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் லைக் போட்டு உள்ளார்கள்.
சிபிராஜ் கலந்த 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற ஐடி துறையைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிலையில் சிபி சத்யராஜ் தன்னுடைய மனைவியின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். ஏனென்றால் சிபி அவர்களின் மனைவி ஹீரோயின்கள் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கிறார்.