2008 ஆம் ஆண்டு பொக்கிஷம் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் பிந்துமாதவி இந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்பு மீண்டும் தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனாலும் இவர் நடித்த திரைப்படங்கள் ஓரளவு சுமாரான விமர்சனங்களை பெற்றதால் பிரபலமடையவில்லை இந்த நிலையில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
ஆனால் அதன்பிறகு அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் காதலிக்கும் டீச்சராக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார். கல்யாணி டீச்சர் என்றால் அனைவருக்கும் தெரியும் ஏனென்றால் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரை படத்தில் அவரின் கதாபாத்திரம் அதுதான்.
இவருக்கு தமிழில் மார்க்கெட் இல்லை என்றாலும் தெலுங்கில் மிகப்பெரிய மார்க்கெட் இருந்து வருகிறது. பட வாய்ப்பு குறைந்ததால் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைய நினைத்தார் ஆனால் அதன் மூலம் கூட இவருக்கு பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு கழுகு 2 திரைப்படத்தில் நடித்து இருந்தார் ஆனால் அந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.
இந்த நிலையில் மீண்டும் பிந்துமாதவி தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடிப்பதற்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இவர் மாயன், யாருக்கும் அஞ்சேல், பகைவனுக்கு அருள்வாய், ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீப காலத்திற்கு முன்பு கவர்ச்சிக்கு நோ கவர்ச்சி காட்ட முடியாது என கறாராக இருந்த பிந்துமாதவி தற்பொழுது கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி முன் பக்கம் ஜன்னல் வைத்து போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் பிரபல அட்டைப்படத்திற்காக தான் என்றாலும் இப்படி ஒரு போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களிடையே கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.