பேட்டியில் பில்லா 3 பற்றி இயக்குனர் விஷ்ணுவர்தன் வெளியிட்ட தகவல்..! ஷாக்கான ரசிகர்கள்..!

billa3

தமிழ் திரையுலகில் தல அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் என இரண்டு மாபெரும் ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர்தான் இயக்குனர் விஷ்ணுவர்தன்.  இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்சமயம் கார்கில் போரில் வீரமாக போராடிய கேப்டன் விக்ரம் பட்ரா என்பவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் திரைப்படமானது ஹிந்தியில்  இயக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் இத்திரைப்படமானது நேற்று இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இவ்வாறு இந்த போரில் மறைந்த ராணுவ வீரனின் மறைவிற்கு பிறகு அவருடைய குடும்பம் நண்பர்கள் ஆகியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதே இத்திரைப்படத்தின் கதை ஆகும்.

இவ்வாறு இந்த திரைப்படம் வெளிவந்ததன் பிறகாக யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய நமது இயக்குனர் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாமல் பில்லா மூன்றாம் பாகம் எப்போது வெளிவரும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நமது இயக்குனர் இதுவரை அது பற்றி நான் யோசிக்கவே இல்லை அதுமட்டுமில்லாமல் நான் முதல் பாகம் எடுப்பதற்கு முன்பும் அதைப்பற்றி நான் நினைத்ததே கிடையாது. ஆனால் ஒரு சில திரைப்படங்கள் மீண்டும் எடுக்காமல் இருப்பது மிகவும் ஒரு நல்ல விஷயம் தான்.

என்று கூரிய நமது இயக்குனர் விஷ்ணுவர்தன் ஏற்கனவே பில்லா 2 திரைப்படத்தை நான்தான் எங்கே போகிறேன் என நாளிதழில் கூட விளம்பரங்கள் வெளியாகின ஆனால் அப்போது அவர் பவன் கல்யாணை வைத்த ஒரு திரைப்படத்தை இயக்கி இருந்ததன் காரணமாக பில்லா-2 திரைப்படத்தை அவரால் இயக்க முடியாமல் போய்விட்டன.

இந்நிலையில் இது ஒரு பக்கமிருக்க ராஜராஜ சோழன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்க விஷ்ணுவர்தன் முன்னிலையில் இருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தை தல அஜித்தை நடிக்க வைக்க உள்ளதாகவும் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

billa 3
billa 3