2019ஆம் ஆண்டு தீபாவளி திருநாளை முன்னிட்டு அக்டோபர் 25-ஆம் தேதி அட்லி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் விஜய் அவர்கள் நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது மல்லாமல் வசூலிலும் களைகட்டியது.
பிகில் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் அட்லீ விஜய் மூன்றாவது முறையாக இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இந்துஜா ரெபா மோனிகா வர்ஷா பொல்லம்மா ஆகிய ராசிக்காரர்கள் நடித்திருந்தார்கள் அந்தத் திரைப்படத்தில் ஒரு சில நடிகைகளும் அறிமுகமாகி இருந்தார்கள்.
அதாவது ரோபோ சங்கர் மகள் இந்த திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வர்ஷா இவர் பிகில் திரைப்படத்திற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளியாகிய சப்தம் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் ரசிகர்களிடம் வைரலாக வில்லை.
அதன்பிறகு வெற்றிவேல் இவன் யார் என்று தெரிகிறதா என பல திரைப்படங்கள் நடித்திருந்தார் அது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய 96 திரைப்படத்தில் விஜய் சேதுபதியை காதலிக்கும் மாணவியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.
சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்தது ரசிகர்கள் நஸிரியா போல இருக்க இருக்கிறீர்கள் என நஸ்ரியாவுடன் ஒப்பிட்டுக் கமெண்ட் செய்து வருகிறார்கள்.