பிகில் திரைப்படம் பல கோடி நஷ்டம்.? கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர் – இதை வைத்து விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி பார்க்கும் விமர்சகர்.!

vijay
vijay

தமிழ் சினிமா உலகில் நல்லதும், கெட்டதும் தினமும் நடக்கிறது அதை அவ்வப்போது வெளி உலகத்திற்கு சொல்லி வருபவர் தான் தயாரிப்பாளர் கே ராஜன். இவர் ரஜினி, விஜய் , அஜித் என தொடங்கி எல்லோரையும் பாராபட்சம் பார்க்காமல் விமர்சித்தும், புகழ்ந்தும் வருகிறார்.

அந்த வகையில் ஒரு தடவை நடிகர் விஜயை படத்தை மோசமாக விமர்சித்த கே. ராஜன் அதில் அவர் சொன்னது : விஜயின் பிகில் படம் 300 கோடி வசூல் செய்தது என கூறுகின்றனர் ஆனால் உண்மையில் பிகில் திரைப்படம் சுமார் 30 கோடி நஷ்டம் என தயாரிப்பாளர் கே. ராஜன் அதிரடியாக பேசியிருந்தார்.

மேலும் அவர் சொன்னது : பெரிய நடிகர்கள் ஒரு படத்திற்கு சுமார் 100 கோடி கிட்டதிட்ட சம்பளம் வாங்குகிறார்கள்.அந்த பணத்தை எல்லாம் எங்கேயோ பதுக்கி வைத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் ரத்தத்தை இப்படி குடிக்கிறார்கள் என விமர்சித்து தள்ளினார்.

அப்பொழுது பெரிய செய்தியாக இருந்தாலும் அதை அப்பொழுது விட்டு விட்டனர் ஆனால் இந்த செய்தியை தற்போது தூசி தட்டி உள்ளார் ப்ளூ சட்டை மாறன். கே.ராஜன் போட்ட அந்த பதிவை எடுத்து தற்போது ப்ளூ சட்டை மாறன் பதிவு செய்து உள்ளளர். இத்தனை பார்த்த விஜய் ரசிகர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

அண்மையில் வலிமை படத்தை விமர்சனம் என்ற பெயரில் அஜித்தை தாறுமாறாகக் பேசிய நிலையில் தற்போது விஜய் ரசிகர்களை கோப்படுத்தி உள்ளது. இதனால் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் அவர் மீது கோபத்தில் இருக்கின்றனர். இவரை இப்படியே விட்டுவிட்டால் நாளுக்கு நாள் வரும் புது படங்களையும், சினிமா நடிகர்களையும் பற்றி விமர்சிப்பார் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.