பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டிக்கு சமீபத்தில் சிம்பிளாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இவர்களுடைய புகைப்படம் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பிகில். தீபாவளி முன்னிட்டு வெளியான இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து கலக்கி இருந்தார்.
மேலும் இந்த படம் பிளாக் பாஸ்டர் ஹிட்டான நிலையில் வசூல் ரீதியாக ரூபாய் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனையை படைத்தது. விஜய் நடித்திருந்த இரட்டை வேடத்தில் ஒன்று மைக்கேல் கேரக்டர் அதில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருந்தார் மேலும் விஜய் மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக இருந்தார்.
அவரிடம் பயிற்சி பெறும் வீராங்கனையாக நடிகைகள் இந்துஜா ,வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி, தாயே ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் மேலும் இந்த படத்தில் அனைவரும் ஹீரோயின்களாக கலக்கியிருந்த நிலையில் முக்கிய ஹீரோயினாக நயன்தாரா நடித்திருந்தார். இதில் ஒரு சிலர் ரியல் கிஷோக்களிலும் பங்கு பெற்று அசத்தியிருந்தார்கள்.
அந்த வகையில் பிகில் படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் தான் நடிகை காயத்ரி ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கின்ற ரியாலிடி ஷோவில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்த இவர் தற்பொழுது சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
மேலும் காயத்ரிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தமான நிலையில் தற்பொழுது ஸர்ப்ரைஸ்சாக நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். மேலும் தற்பொழுது மிகவும் சிம்பிளாக இவருக்கு திருமணமும் நடந்து முடிந்துள்ளது இது குறித்து அதிகாரப்பூர்வமாக தனது கணவரை அறிமுகம் செய்கிறேன் என குறிப்பிட்டு திருமண புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.