குறுகிய காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் அட்லி. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் பிகில் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படம்.
இந்த திரைப்படத்தில் இந்திராஜா, இந்துஜா, ரெப மோனிகா, வர்ஷா போலாமா என பல நடிகைகள் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளாக நடித்த பல புதுமுக நடிகைகளும் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டார்கள் அப்படி இளம் நடிகையாக இந்த படத்தில் நடித்தவர்தான் ரெபா மோனிகா இந்த திரைப்படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இவர்.
இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் காதலை ஒப்புக் கொள்ளவில்லை என்பதற்காக முகத்தில் ஒருவர் ஆசிட் அடித்து விடுவார் அதனால் கால்பந்து விளையாடுவது விட்டுவிடுவார் அனிதா அதன் பின்னர் இவரை விஜய் சந்தித்து மீண்டும் கால்பந்து விளையாட்டில் பங்கு பெறச் செய்வார். இவர் மீண்டும் விளையாட வரும் பொழுதுதான் சிங்கப் பெண்ணே பாடல் ஒலிக்கும்.
இவர் இதற்கு முன்பு ஜெய் நடிப்பில் வெளியாகிய ஜருகண்டி என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார். ஆனால் இவருக்கு பேரும் புகழும் பெற்று கொடுத்தது பிகில் திரைப்படம் தான் அதேபோல் குக் வித் கோமாளி அஸ்வின் அவர்களுடன் இணைந்து நடனமாடிய குட்டி பட்டாசு ஆல்பம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது. மேலும் எப் ஐ ஆர் என்ற திரைப் படத்தில் தற்போது நடித்து வருகிறார்.குடும்ப குத்து விளக்காக நடித்த இவர் உடையில் படு கவர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன சிங்கபெண்ணே இதெல்லாம் என புலம்பி வருகிறார்கள்.