தமிழ் சினிமாவில் NO.1 ஹீரோவாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரைக்கும் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ளவர். இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு படம் வெற்றி பெறும் போது சூப்பர் ஸ்டார் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 169 வது திரைப்படமான ஜெயிலர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவர் உடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், வசந்த ரவி, விநாயகன், யோகி பாபு..
மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக டான் படத்தை இயக்கிய அறிமுகமான சிபி சக்கரவர்த்தி உடன் கைகோர்த்து இருக்கிறார் அந்த படத்தை நிறுவனம் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி சிபிச் சக்கரவர்த்தி லைக்கா நிறுவனம் இணையும் இந்தப் படத்தில் நகைச்சுவை அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது இதனால் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து பிரபல காமெடி நடிகர் நடிக்க இருக்கிறார்..
அந்த பிரபல நடிகர் வேறு யாரும் அல்ல வடிவேல் தானாம்..இதற்கு முன்பாக வடிவேலும் ரஜினியும் இணைந்து குசேலன், சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற்றது மீண்டும் ஒரு முறை இந்த கூட்டணி இணைய உள்ளதால் நிச்சயம் இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.