பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? ஆத்தாடிஒவ்வொரு ஆளுக்கும் இவ்வளவா..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசன் முடிவடைந்த நிலையில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. மாலை ஆறு முப்பது மணிக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது அதேபோல் கமல் தொடங்கிவைத்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொள்ள இருப்பது யார் என்ற விவரம் ஹாட்ஸ்டார் மற்றும் டுவிட்டரில் வெளியாகிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் மொத்த போட்டியாளர்களின் விவரத்தை இங்கே காணலாம்.

அந்த வகையில் சுரேஷ் சக்கரவர்த்தி, அபினை, நிருப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, சுருதி, சுஜா வருணி, அனிதா சம்பத், தாமரை, ஹாரி, தாடி பாலாஜி, மோகன் மற்றும் அபிராமி என பதினான்கு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்களுக்கு சம்பளம் எவ்வளவு என்பதை தற்போது கசிந்துள்ளது.

அப்படி வெளியாகிய தகவலில் சினேகனுக்கு ஒரு நாளைக்கு 45 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் வரை சம்பளமாக கொடுக்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளன அதேபோல் வனிதா விஜயகுமார் அவர்களுக்கும் அதே சம்பளம் கிடைக்கும் எனவும் கூறுகிறார்கள். அதேபோல் ஜூலிக்கு ஒரு நாளைக்கு 30000 ரூபாய் சம்பளம் எனவும் தாடி பாலாஜிக்கு 30,000 ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஜூலி மற்றும் தாடி பாலாஜிக்கு 45 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது அதேபோல் மாற்ற பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அப்பொழுது பிக்பாஸி கலந்துகொண்ட பொழுது சம்பளம் எவ்வளவோ அதையே கொடுக்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மொத்தத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 5 வது சீசனில் பட்டையை கிளப்பிய போட்டியாளர்கள் இந்த சீசனில் கலந்து கொள்ள இருப்பதால் சம்பவத்திற்கு குறைச்சலே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment