பிக் பிரதர்ஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சியை ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளிலும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் மிகவும் பிரபலமான ரியாலிடி ஷோவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமானது. விருவிருப்பு மற்றும் பரபரப்புக்கு பஞ்சமே இல்லாமல் இந்த நிகழ்ச்சி அந்த ஆண்டு ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டது.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்தான் தொகுத்து வழங்கினார் அதனால் ரசிகர்களை வெகுவாக இந்த நிகழ்ச்சி கவர்ந்தது. கடைசியாக இந்த பிக் பாஸ் 5 வது சீசன் நிகழ்ச்சி முடிவடைந்தது. அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ஹாட்ஸ்டார் ott தளத்தில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல் சீசனில் ஆரவ் இரண்டாவது சீசனில் ரித்விகா மூன்றாவது சீசனில் முகேன் நான்காவது சீசனில் ஆரியும் ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டிலை வென்றார்கள். இந்த பிக் பாஸ்அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த 5 வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமலஹாசனும் தொகுத்து வழங்கி வந்தார் ஆனால் பணிச்சுமை அதிகமானதால் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்க முடியாமல் போனது.
இந்த நிலையில் தற்பொழுது சிம்பு அவர்கள் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் தற்போது தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது இந்த நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் நாகர்ஜுனா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பிந்து மாதவி அவர்களும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
இவர் ஏற்கனவே தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் வைல்ட் கார்டு போட்டியாளராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.