biggboss tamil 7 : பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது ஒவ்வொரு நாளும் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது 75 நாட்களைக் கடந்து ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மிடில் எவிக்ஷனில் அனன்யா வெளியே சென்றார் அவரைத் தொடர்ந்து கூல் சுரேஷ் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் இதனால் ரசிகர்கள் கூல் சுரேஷ் வெளியே சென்று விட்டார் என சோகத்தில் இருந்தார்கள்.
அது மட்டும் இல்லாமல் கூல் சுரேஷ் போனதுக்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியை யாரும் பார்க்க மாட்டார்கள் என எதிர்பார்த்த நிலையில் இன்னும் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் குடும்பங்கள் உள்ளே வந்து போட்டியாளர்களை சந்தித்து வருகிறார்கள்.
அந்த வகையில் அர்ச்சனாவின் குடும்பம் ரவீனாவின் குடும்பம் நிக்சன் குடும்பம் என ஒவ்வொரு குடும்பமாக வந்து சந்தித்து வருகிறார்கள் அந்த வகையில் விக்ரமின் தங்கை பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளே வந்துள்ளார் அப்பொழுது விக்ரமிடம் சூனியக்காரி மாயா பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் உனக்கு பைவ் ஸ்டார் எதற்கு என்பது போல் மாயா பேசியதாக கூறுகிறார்.
அதுமட்டுமில்லாமல் மாயா உன்னை பற்றி கேவலமாக பேசிக் கொண்டிருக்கிறார் அதனால் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் யாரையும் நம்பாதே அர்ச்சனா கூட பரவாயில்லை, ஆனா இந்த மாயா மட்டும் ரொம்ப மோசம் என்பது போல் விக்ரமிடம் விக்ரம் தங்கை கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தனியா போய் உட்கார்ந்து கொண்டு பேசாத எதையும் யோசிக்காத என்பது போல் அறிவுரை கூறிவிடுகிறார்.
இத்துடன் இந்த ப்ரோமோ வீடியோ முடிகிறது.