இணையதளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்.இதனைத் தொடர்ந்து பகல் நிலவு, கடை குட்டி சிங்கம்,இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4ல் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் 90 நாட்கள் வரை தாக்குப்பிடித்தார் ஆனால் கடைசி வாரத்தில் மட்டும் தான் தனது சிறந்த திறமையை வெளிப்படுத்தி சிங்கம் என்ற பெயரோடு வீட்டிற்கு சென்றார்.
பிக்பாஸில் கலந்துகொண்ட பாலாஜி,ரம்யா பாண்டியன், சம்யுக்தா போன்றோருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து விட்ட நிலையில் விரைவில் ஷிவானிக்கும் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை தொடங்கிவிட்டார் ஷிவானி.
அந்த வகையில் தற்பொழுது வடிவேலு திரைப்படமான காலம் மாறிப்போச்சு திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வாடி பொட்ட புள்ள வெளியே என்ற பாட்டிற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.
தற்போழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ வெளியிட்ட 2 நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை தொட்டுவிட்டது அதுமட்டுமல்லாமல் லைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.