biggboss season 4 fans started discussing about army on considering their dance video: பிக்பாஸ் முதல் ப்ரமோ மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடலோடு வெளிவந்து அதில் டான்ஸ் ஆடியவர்களில் யாருடைய டான்ஸ் நன்றாக இருக்கிறது என்று அதற்குள் போட்டி ஆரம்பித்து விட்டது.
சமூக வளைதளத்தில் யாருக்கு ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் என போட்டி ஆரம்பித்து விட்டது. சிலர் ஷிவானிக்கு கமெண்ட் செய்கின்றனர், சிலர் கேப்ரில்லா விற்கு என கமெண்ட் செய்கின்றனர் மேலும் சிலர் ரம்யா பாண்டியனுக்கு என கமெண்ட் செய்கின்றனர்.
சிலர் புரோமோ வெளியாகி ஒரு நாள் கூட ஆகவில்லை அதற்குள்ளேயே ஆர்மியா என கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ விஜய் டிவி ஆவலுடன் எதிர்பார்த்த டிஆர்பி ரேட்டிங் முன்னுக்கு வருவது என்பது இந்த பிக்பாஸ் வைத்து நடந்துவிட்டது என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது முதலிடத்தில் இருப்பது கேப்ரியலா என பேசப்படுகிறது. அவர்தான் மெட்டுக்கு ஏற்ப சரியாக டான்ஸ் ஆடி அனைவரையும் கவர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் தான் 2 k எனவும் பேசப்பட்டு விரைவில் இவருக்கு தான் ஆர்மி ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
மேலும் இந்த ப்ரமோவில் ரியோவும் அறந்தாங்கி நிஷாவும் பாத்ரூமில் டான்ஸ் ஆடுகின்றார்கள். எனவே இவர்கள்தான் இந்த சீசனில் மக்களை சிரிக்க வைப்பார்கள் போல தெரிகிறது எனவும் கூறுகின்றனர். தற்போது இந்த டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Aattatha aarambichutaanga ba? #VaathiComing othu! https://t.co/N78gO1cAOP
— Kaushik LM (@LMKMovieManiac) October 5, 2020