kavin is controversial with her Instagram post published by Lasliya: விஜய் தொலைக்காட்சியில் கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. பிக்பாஸ் வீட்டில் கவினும் லாஸ்லியாவும் நெருங்கி பழகியதால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக ரசிகர்கள் முடிவு செய்து கவின்லியா என்ற ஒரு ஆர்மியை உருவாக்கினர்கள் .
இதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பின்பு இருவரும் திருமணம் செய்வதை பற்றி அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அதைப் பற்றி பேசாமல் அவர்களின் சினிமா வாழ்க்கையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர்.லாஸ்லியா இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தற்போது லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங்குக்கு ஜோடியாக ஃப்ரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் கயல் ஆரியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அது போலவே கவினும லிப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா. தற்போது கண்ணாடி முன் தான் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டு “அதில் வாழ்க்கை நமக்கு பாடம் கற்பிக்க முயற்சிக்கிறது. எனவே உங்கள் தவறுகளை ஒத்துக் கொண்டு கண்ணாடி முன்பு நின்று பாருங்கள்”. என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த லாஸ்லியா ரசிகர்கள் கவினைத் தான் கூறுகிறாரோ என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அதுமட்டுமில்லாமல் கவினை காதலித்தது தவறு என்று நினைக்கிறாரோ என்னவோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.