தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்று பிஎஸ்பிபி பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் மிகவும் ஆபாசமாக பேசியதாக கூறி வழக்கு போடப்பட்டுள்ளது. இந்தப் பள்ளி நிறுவனம் சென்னையில் உள்ள கே.கே நகரில் உள்ளது. அந்த வகையில் இந்தப் பள்ளிக்கூடத்தில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன் தான் மாணவிகளிடம் மிகவும் தவறாக பேசி உள்ளதாக கூறப்படுகிறது.
அதோடு தர்மசங்கடம் படுத்தும் வகையில் பல அநாகரிகமான கேள்விகள் கேட்கப்படுவதாகவும், ஆன்லைன் வகுப்பில் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு பாடம் எடுத்ததாகவும் கூறப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒன்றிணைந்து ராஜகோபலன் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். எனவே போலீசாரும் தற்பொழுது ராஜகோபாலன் கைது செய்துள்ளார்கள் அந்தவகையில் விசாரணையில் ராஜகோபாலன் கடந்த ஐந்து வருடங்களாக மாணவிகளிடம் இவ்வாறுதான் நடந்து வருவதாக வாக்கு மூலம் அளித்துள்ளார். எனவே தற்பொழுது பலரும் மிகவும் தவறாக பிஎஸ்பிபி பள்ளியை விமர்சித்து வருகிறார்கள்.
ஏனென்றால் இதற்கு முன்பு அதாவது 2012ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான மனோகரின் மகனும் இந்த பள்ளிக்கூடத்தில் தான் படித்துள்ளார். அவ்வப்பொழுது நீச்சல் குளத்தில் பயிற்சிக்காக ஈடுபட்ட பொழுது நீரில் மூழ்கி விட்டார். எனவே அப்பொழுதே ஐந்து பேர்களின் மீது வழக்கு போடப்பட்டு இருந்தது. எனவே தொடர்ந்து இந்தப் பள்ளியில் பல சந்தேகப்படும் வகையில் பல தவறான தகவல்கள் வெளிவருவதால் பலரும் இந்த பள்ளிக்கூடத்திற்கு எதிராக பல விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். அந்த வகையில் ராஜகோபாலனின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கூடத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் பிரபலம் ஒருவர் தனது ட்விட்டரில் தயவுசெய்து இராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் அந்த பள்ளி நிறுவனத்தின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் ஏனென்றால் இப்பொழுது உள்ள சிறுவர்கள் எல்லாம் பல விஷயங்களை தெரிந்து வைத்துள்ளார்கள். அந்த வகையில் தற்பொழுது உள்ள மாணவர்கள் எல்லாம் நெட்ப்ளிக்சில் கண்ட கண்ட படங்களை பார்த்து வருகிறார்கள். எனவே உண்மையை கண்டறிந்து அதன் பிறகு தகுந்த ஆதாரத்துடன் ராஜகோபாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் அதுவரையிலும் ராஜகோபாலனை கைது செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜூலி தற்போது நீ எல்லாம் நிஜமாவே மனுஷ ஜென்மம் தான். உன் சொந்த பொண்ண பண்ணுனா சும்மா இருப்பியா இதுல அந்த கேவலமான பிறவிக்கு சார் பட்டம் வேற. அவ என் கையில கிடைச்சா அவ்ளோதான் என ஆவேசமாக கூறியுள்ளார் ஜூலி.